நேட்டோ உறுப்பினராக உள்ள ஒரு குட்டி நாடு கூட மூன்றாம் உலகப்போர் உருவாக காரணமாக இருக்கலாம் என்று கருத்து கூறிய டிரம்பிற்கு கண்டங்கள் வலுத்துவருகிறது.
அண்மையில் தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபரிடம் நேட்டோ உறுப்பினர்களாக உள்ள எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது நேட்டோவில் உறுப்பினராக உள்ள மற்ற அனைத்து நாடுகளையும் தாக்கியதற்கு சமம் அப்படியிருக்க வெறும் 6 லட்சம் மக்கள் தொகையை கொண்ட குட்டி நாடான மாண்டிநெக்ரோவை காப்பாற்ற அமெரிக்கா சொல்லவேண்டுமா என்ற கேள்வி கேட்க்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிரம்ப் மாண்டிநெக்ரோ 6 லட்சம் பேரை கொண்ட சிறிய நாடுதான். அங்குள்ள ராணுவ வீரர்கள் வெறும் 2 ஆயிரம்தான் ஆனால் அவர்கள் ஆக்ரோசமானவர்கள். குறைவான வீரர்களை கொண்ட குட்டி நாடாக இருக்கும் மாண்டிநெக்ரோ கூட நாளை மூன்றாம் உலகப்போரை துவங்கிவைக்கும் நாடாக இருக்கலாம் என்ற கருத்துக்கு தற்பொழுது கண்டனங்கள் வலுத்துவருகிறது.