Skip to main content

பிரிட்டன் நிருபர் கடலில் குளித்த போது முதலையிடம் பலி

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
பிரிட்டன் நிருபர் கடலில் குளித்த போது முதலையிடம் பலி

இலங்கைக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் நிருபர் கடலில் குளித்த போது முதலையிடம் சிக்கி பலியானார். பிரிட்டனில் முன்னணி பத்திரிகையான ‛பைனான்சியல் டைம்ஸ்' இதழின் நிருபராக பணியாற்றி வந்தவர் பவுல் மெக்ளன், 24, தனது நண்பர்களுடன் இலங்கைக்கு விடுமுறைக்காக சுற்றுலா சென்றார். இலங்கையின் முக்கிய சுற்றுலா தலமான கிழக்கு கடற்கரை பகுதியில் பனாமா கடல் பகுதியில் நேற்று முன் தினம் நன்பகல் 3 மணியளவில் குளிக்க சென்ற போது காணாமல் போனார். தகவலறிந்த கப்பற் படையினர் தேடினர். உடல் கிடைக்கவில்லை. பின்னர் நேற்று  மாலை கரையோரம் சிதைந்த நிலையில் அவரது உடல் ஒதுங்கியது. போலீசார் விசாரணை நடத்தியதில் அவரை முதலை இழுத்துச்சென்று கடித்து திண்றது தெரியவந்தது. 

சார்ந்த செய்திகள்