நாம் கடுமையான காலத்தை நோக்கிச் செல்ல இருக்கிறோம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலக அளவில் 3.57 கோடி பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சிப் பணிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் தொற்று எப்போது ஏற்பட்டது என்பதை சீனா தெளிவாகக் கூறவில்லை. தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகமாகப் பரவியுள்ளது. உலக மக்கள்தொகையில் 10 பேரில் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு உள்ளது. நாம் கடுமையான காலத்தை நோக்கிச் செல்ல இருக்கிறோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவும்” என்று தெரிவித்துள்ளது.