கியூபாவின் குவாண்டனமோ கடற்படை தளத்தில் இருந்து 136 பயணிகளுடன் புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விலே கடற்படை விமான நிலையம் நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் ஆற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புளோரிடாவின் விமானநிலைய இறங்குதளத்தில் தரையிறங்கிய இந்த பயணிகள் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மிகப்பெரிய ஆற்றுக்குள் பாய்ந்தது. இதனால் விமானத்தின் உள்ளிருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு எழ ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் ஆற்றுக்குள் பாய்ந்த விமானம் அதிர்ஷ்டவசமாக மூழ்காமல் மிதந்து கொண்டிருந்தது. விமான மிதந்துகொண்டிருந்த நிலையிலேயே அதில் உள்ள பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் மிகப்பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக அம்மாகாண மேயர் தெரிவித்தார்.
இதுகுறித்து அதில் பயணம் செய்த பயணிகள் குறிப்பிடுகையில், மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளோம்,, இறைவனுக்குத்தான் நன்றி கூற வேண்டும் என தெரிவித்தனர். 136 பயைகளுடன் விமானம் ஆற்றுக்குள் பாய்ந்த இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.