தென் கொரியாவில், சுமார் 50,000 வான் (இந்திய மதிப்பு ரூ.3,140) மதிப்புள்ள பணத்தாள்களை கரோனா பீதியால் ஒருவர் வாஷிங் மிஷினில் துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனித சமூகம் மிகப் பெரும் நோய்த் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. கரோனா நோய்த் தடுப்பு மருந்துகள் சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அடுத்தகட்ட ஆய்வுகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. கரோனா வந்தவர்கள் அதை எதிர்கொள்ள போராடும் சூழலில், கரோனாவிலுருந்து தற்காத்துக்கொள்ள மற்றவர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில், தூணிலும் துரும்பிலும் இருக்கும் கரோனா ஏன் பணத்தில் இருக்காது எனும் கேள்வி யூயம் என்ற தென்கொரியர் ஒருவருக்குத் தோன்றியுள்ளது. இதன் விளைவாக, உடனே கரோனாவை அகற்ற நினைத்த அவர், தனது 50,000 வான் (இந்திய மதிப்பு ரூ.3,140) மதிப்புள்ள பணத்தாள்களை வாஷிங் மிஷினில் போட்டு சுத்தம் செய்து காயவைத்துள்ளார். ஆனால், அந்தப் பணத்தாள்கள் மிகவும் சேதமடைந்து விட்டதால், வங்கிக்குச் சென்று பணத்தை மாற்ற முயன்றுள்ளார். வங்கி, அவரிடம் சேதமடைந்த நோட்டுகளை காட்டி உதவ மறுத்துவிட்டது.