ஆஸ்திரியா நாட்டின் இளவயது பிரதமரானார் குர்ஸ்
ஐரோப்பிய யூனியனில் ஆஸ்திரியா உறுப்பினர் நாடாக அங்கம் வகித்து வருகிறது. இங்கு சுமார் 88 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 31 வயதான கன்சர்வேடிவ் மக்கள் கட்சியின் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ் 31 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். இதன் மூலம் உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை குர்ஸ் பெற்றிருக்கிறார். வெற்றியை தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய குர்ஸ், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டதாக என சூளுரைத்துள்ளார்.