Published on 29/12/2020 | Edited on 29/12/2020

அமெரிக்காவை சேர்ந்த உணவு நிறுவனமான 'ஈட் ஜஸ்ட்' நிறுவனம், செயற்கை கோழிக்கறியை உருவாக்கியுள்ளது. இயற்கை கோழிக்கறிக்கு மாற்றாக இந்த கோழிக்கறியை, கோழி செல்களின் மூலம் ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.
இந்த செயற்கை கோழிக்கறிக்கு சிங்கப்பூர் நாடு அனுமதியளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் விரைவில் இந்த செயற்கை கோழிக்கறி விற்பனைக்கு வரவுள்ளது.
தற்போது விற்பனைக்கு வரவுள்ள செயற்கை கோழிக்கறி, இயற்கையான கோழிக்கறி விலையில்தான் விற்பனை செய்யப்படும் எனவும், அதன் பிறகு இதன் விலை குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.