
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களத நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில், ஆரம்பத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. உலக அளவில் அமெரிக்காவில் இதன் தாக்கம் அதிகம் இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 59,826 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,119 பேர் இந்த நோய்த் தொற்றின் காரணமாக நேற்று (29.01.2021) ஒருநாளில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பிரேசிலில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 லட்சமாக அதிகரித்துள்ளது. 2.2 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களை அச்சமடைய செய்துள்ளது.