Published on 11/02/2023 | Edited on 11/02/2023
சூரியனின் ஒரு பகுதி உடைந்து புயல் போல காட்சியளிப்பது விஞ்ஞானிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரியனின் வட துருவப் பகுதியில் சூறாவளி போன்ற பகுதி சுழன்று கொண்டிருக்கிறது. இது ஒரு விதமான புயல் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து நிகழுமோ எனக் கலக்கத்தில் உள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் பதிவான கட்சியை விஞ்ஞானி ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, தற்பொழுது அந்த சூரியப் புயல் காட்சிகள் வைரலாகி வருகிறது. கடந்த வருடம் இதேபோல் அஃபெலியன் நிகழ்வு தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.