அமெரிக்காவிலுள்ள மிசௌரி மாகாணத்தின் ஆளுநர் எரிக் கிரிட்டன்ஸ், அவரின் ஒப்பனையாளரான ஒரு பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியிருக்கிறார் என்று மிசௌரி மாகாண நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர்தான் இந்த வழக்கு பற்றிய அறிக்கை, சம்மந்தப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டை வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த ஆளுநர் ரிபப்ளிக் கட்சியை சேர்ந்தவர். இப்படி ஒரு குற்றச்சாட்டு அவர் மீது இருப்பதால், "நீங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்வது நல்லது" என்று கட்சியை சேர்ந்தவர்களும், ரிபப்ளிக் கட்சியின் மாகாண அட்டர்னி ஜெனரல் ஜோஷ் ஹாவ்லியும் தெரிவித்துள்ளார். ஜோஷ் இந்த ஆண்டின் செனட் வேட்பாளரும் கூட. இருந்தாலும் எரிக் பதவியில் இருந்து ராஜினாமா செய்யாமல், "இது அனைத்தும் என் மீது சுமத்தப்பட்ட அப்பட்டமான பொய்" என்கிறார்.
கடந்த செவ்வாய்கிழமை, ஜோஷ் (அட்டர்னி ஜெனரல்), மேலும் ஒரு குற்றச்சாட்டை எரிக் மீது வைத்துள்ளார். அது என்ன என்றால், எரிக் ஆரம்பித்த ஒரு என்ஜிஓவுக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டியிருக்கிறார் என்று குற்றச்சாட்டை வைத்திருக்கின்றனர். இதன் மூலம் அந்த ஆளுநருக்கு மக்களிடையே கெட்ட பெயர் அதிகரித்துள்ளது. இந்த பாலியல் வழக்கு நிரூபிக்கப்பட்டால் நான்காண்டு சிறைத்தண்டனை எரிக்குக்கு நிச்சயம் வழங்கப்படும் என்கின்றனர்.
ஜூன் 1ஆம் தேதி அவரது கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இது கட்சியிலும், மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நல்ல பெயருக்கும் பங்கம் விளைவிக்கவே இவ்வாறு கட்டமைக்கிறார்கள்", என்று எரிக் சொல்கிறார்.