Skip to main content

இஸ்ரேலில் 9000 ஆண்டுகள் பழமையான முகமூடி...

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

 

mas

 

இஸ்ரேலின் ஹெப்ரோன் பகுதியில் கண்டறியப்பட்ட 9000 ஆண்டுகள் பழமையான முகமூடி மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கல்லால் செய்யப்பட்ட இந்த முகமூடி போல் உலகில் மொத்தம் 15 மட்டுமே உள்ளது. இது அந்த பகுதியிலிருந்து சில திருடர்களால் கண்டறியப்பட்டு, பின் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9000 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இதில் கண்ண எலும்புகள், மூக்கு ஆகியவை தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது. இது  நியோலிதிக் யுகத்தில் செய்யப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மெஸ்ஸி பெயருக்கு இவ்வளவு பவரா?; சாதுரியமாக தப்பித்த மூதாட்டி

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில், அர்ஜெண்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி, ஹமாஸ் படையினரிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த 90 வயது மூதாட்டியின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பித்த மூதாட்டி எஸ்டர் குனியோ கூறுகையில், “ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரு நாள் காலை என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து எனது குடும்பம் எங்கே? என்று கேட்டனர். அதற்கு நான் மட்டும் தான் தனியாக இருக்கிறேன் என்று எனது மொழியில் கூறினேன். எனக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் என் மீது கோபமாகி எந்த மொழியில் பேசுகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் அர்ஜெண்டினாவில், ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறேன் என்று கூறினேன். அதற்கு அர்ஜெண்டினா என்றால் என்ன..? என ஒருவர் கேட்டார்.

 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா..? அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர் என தெரிவித்தேன். அதை கூறியதும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு என்னுடன் செல்பி எடுத்துவிட்டு சென்றனர். நான் மெஸ்ஸியின் பெயரை குறிப்பிட்டதால் நான் காப்பாற்றப்பட்டேன்” என்று கூறினார். ஹமாஸ் படையினரால் கடத்தப்பட இருந்த மூதாட்டி, பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் காப்பாற்றப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆஸ்கர் விழா; இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த திரைப் பிரபலங்கள் வலியுறுத்தல்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Oscars 2024 Celebrities call for Israel-Hamas ceasefire

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 96வது ஆஸ்கர் விருது விழா வழக்கம் போல் லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

இதனிடையே ஆஸ்கர் 2024 சிவப்பு கம்பள வரவேற்பில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு தங்களது ஆதரவை  தெரிவித்துள்ளனர். அதனை வலியுறுத்தும் விதமாக ஆர்டிஸ்ட்ஸ் 4 சீஸ் ஃபையர் (Artists4Ceasefire) அமைப்பினுடைய ஒரு சின்னத்தை தங்களது ஆடையில் அணிந்திருந்தார்கள். ஒரு கைக்குள் ஒரு இதயம் இருப்பது போல அந்த சின்னத்தில் வரையப்பட்டிருந்தது. இதேபோல் கடந்த மாதம் நடந்த கிராமி விருது விழாவிலும் இந்த பேட்சை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.