சீனாவை தாக்கிய ஹாட்டோ புயலில் 12 பேர் பலி 153 பேர் படுகாயம்
சீனாவில் உள்ள ஹாங்காங் நகரை ஹாட்டோ என்னும் புயல் தாக்கியதில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால், அந்த குட்டி நகரம் முடங்கியது. புயல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். 153 பேர் படுகாயத்துடன் மாக்கோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புயலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பணியினர் ஈடுபட்டுள்ளனர்.