Published on 16/07/2020 | Edited on 16/07/2020
கந்த சஷ்டி கவசத்தைத் தவறாகச் சித்தரிக்கும் நபர்கள், மதங்கள் மற்றும் தலைவர்களைத் தவறாகச் சித்தரித்து யூ-ட்யூபில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதைத் தடுக்கும் வகையில் அரசு புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ட்விட்டர் மற்றும் யூ-ட்யூப் போன்ற சமூக வலைத்தளங்களில், மதங்கள் மற்றும் தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக வீடியோக்கள் பதிவு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்தால், விசாரிப்பதாக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்தது.