மலை ஏற்றத்தின் போது தவறி விழுந்து 200 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட இளைஞரை செல்போன் உதவியுடன் தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் மலையேற்ற பயிற்சி சென்ற இளைஞர் ஒருவர் கால் இடறி ஆபத்தான மலை பகுதியின் உச்சியில் சிக்கிக்கொண்டார். சுமார் 43 நேர தீவிர போராட்டத்திற்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இன்று காலை மலையேற்ற பயிற்சிக்கு சென்ற இளைஞர் ஒருவர் மலையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது மலைக்குன்று ஒன்றை பிடித்து தப்பித்துள்ளார் அந்த இளைஞர். மேலும் தான் மலையில் சிக்கியுள்ள இடத்தை செல்போன் மூலம் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்துள்ளார். அவர் மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பதை உறுதி செய்த தீயணைப்பு துறையினர், ஹெலிகாப்டர் உதவியுடன் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.