திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானம்(24) கோவையில் சூலூரில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் கூலித் தொழிலாளியாக அங்கேயே தங்கி இருந்து வேலைப் பார்த்து வந்தார் அப்போது, சந்தானத்திற்கும், அங்கு உள்ள அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு இஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். பெற்றோர்கள் சிறுமி குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தானம் ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் பள்ளி மாணவியை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சந்தானத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.