Skip to main content

பள்ளி சிறுமியிடம் இளைஞர் ஆபாசப் பேச்சு; 3 கி.மீ. தூரம் பைக்கில் துரத்திய அப்பா - மகள்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Youth arrested Police for misbehaving with school girl ranipet

 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவன் மணிகண்டன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்கிறானாம். இவன் பள்ளமுள்ளவாடி கிராமத்திலுள்ள தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளான். பள்ளமுள்ளவாடி கிராமத்தை சேர்ந்த நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் ஏரிக்கரை மீது சைக்கிள் ஓட்டிக்கொண்டு பேனா வாங்க கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை நிறுத்தி நண்பரின் பெயரை சொல்லி அட்ரஸ் விசாரித்துள்ளான். அந்த சிறுமி சைக்கிளை விட்டு இறங்கி அட்ரஸ் சொல்லும்போது, அந்த சிறுமியிடம் அழகா இருக்க எனத் தொடங்கி ஆபாசமாக பேசியதோடு, உடலின் மீது கை வைத்ததாக கூறப்படுகிறது. அவன் செயலைப் பார்த்து அதிர்ச்சியான அந்த சிறுமி, கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடனே அவன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளான்.

 

அந்த சிறுமி வீட்டுக்கு வந்து தனது தந்தையிடம் நடந்ததை சொல்லியுள்ளார். அதிர்ச்சியான அவர் உடனே காவல்நிலையத்தில் புகார் தரலாம் எனச்சொல்லி மகளை அழைத்துக்கொண்டு ராணிப்பேட்டைக்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். அப்பா – மகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வரும்போது, தன்னிடம் பாலியல் ரீதியாக பேசியவன் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்ததைப் பார்த்து சிறுமி தனது தந்தையிடம் சொல்லியுள்ளார். உடனே வண்டியை திருப்பிக்கொண்டு அவனை துரத்தியுள்ளார்கள். வண்டியில் தனது அப்பாவோடு அந்த சிறுமி தன்னை துரத்துவதைப் பார்த்தவன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளான். இவர்களும் விடாமல் துரத்தியுள்ளார்கள். இரண்டு கிலோமீட்டர் தூரம் துரத்தியும் அவனை பிடிக்க முடியாததால் தப்பிவிட்டான்.

 

அப்பாவும் மகளும் வந்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணையும், அதன் வீடியோவையும் தந்துள்ளனர். இருசக்கர வாகன பதிவு பண்ணின் முகவரியை கண்டறிந்த போலிஸார், அவன் வீட்டுக்கு சென்று அந்த இளைஞனை கைது செய்து அழைத்து வந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் கற்றுத் தருவது போல், ஆபாசமாக பேசினால் உடனே கூச்சல் போடவேண்டும், குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும் என சிறுமிக்கு பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் தாய்-தந்தை கற்றுத் தந்ததை மனதில் வைத்திருந்து அதுபோல் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவன் மீது புகார் தந்து சிறைக்கு அனுப்பிய அந்த சிறுமி மற்றும் குடும்பத்தாரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.