வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், தரையில் அமர்ந்து அவருடைய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டார்.
வேலூர் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை அளிக்க வந்துள்ளார். அப்பொழுது திடீரென தர்ணாவில் ஈடுபட்ட அந்த இளம்பெண் தந்தை பெயரில் உள்ள வீட்டுமனை நிலத்தை குறைவாக காட்டி பட்டா வழங்கியிருப்பதாக கூறியதோடு, பலமுறை இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தார்.
அப்பொழுது வெளியே வந்த ஆட்சியரிடம் நேரடியாக புகார் அளித்தார். உடனே தரையில் அமர்ந்து அப்பெண்ணிடம் கோரிக்கையை கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த பெண் சமாதானமாகவில்லை. அதனால் அவரை கைது செய்ய உத்தரவிட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.