கண்டுகொள்ளாத தமிழக அசு: மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆசிரியர்கள் வேதனை

திருச்சி மணப்பாறையில் ரஜீவ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர். பள்ளிகல்வித்துறையில் தலைமையில் கீழ் இயங்கும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் உள்ள இடைநிலை கல்வி திட்டத்தில் ஐ.இ.டி.டிஸ்.டிஸ். மாற்றுதிறனாளி ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தொகுப்பு ஊதிய ஆசிரியராக இருக்கிறார். இந்த திட்டத்திற்கு இயக்குநராக கண்ணப்பன் இருக்கிறார்.
மணப்பாறையில் திருச்சி சோம்பரசம் பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தீடிர் என நாமக்கல் ராசிபுரத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் அவர் தன்னுடைய டூவிலரை நாமக்கலில் கொண்டு போய் வைத்தார். தீடீர் என திருச்சி வரவேண்டிய வேலை இருந்தால் அவர் டூவிலரில் நேற்று காலையில் ராசிபுரத்திலிருந்து திருச்சிக்கு வரும் போது துறையூர் அருகே இன்னோரு டூவிலரில் மோதி பயங்கர காயங்களுடன் திருச்சி கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
அரசு பணியில் இருப்பவர்களுக்கு இப்படி எதிர்பாராத நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவி செய்வர்கள். ஆனால் எங்களை போன்று அரசு சார்பாக நடக்கும் இந்த திட்டத்தில் பணியில் வேலை செய்பவர்களுக்கு எந்த ஓய்வுதியம், இடைகால நிவாரணம் எதுவும் இல்லாமல் இருக்கிறோம்.
இதே போல தான் 1 வருடத்திற்கு முன்பு சங்கரநாரயணன் என்பவர் எதிர்பாராத விதமாக விபத்தில் மரணம் அமைந்த குடும்பத்தினர் தவித்தனர்.
தமிழக முழுவதும் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிவர்கள் 155 பேர் இருக்கிறார்கள். இதில் பணிபுரியும் அனைவருமே இந்த திட்டத்தில் 15 வருடங்களுக்கு மேல் பணிபுரிவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களை பள்ளிகல்வித்துறையினர் கண்டுகொள்வதே இல்லை என ஆதங்கப்பட்டார்கள்.
ஜெ.டி.ஆர்.