Skip to main content

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு!

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
bala


பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

கடும் மூச்சுத்திணறல் காரணமாக எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். இவர், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை எழுதியுள்ளார். பாக்யராஜ் நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தையும் இயக்கி உள்ளார்.

அவர் எழுதிய நூல்களில் உடையார், திருவரங்கன் உலா மெர்குரி பூக்கள் ஆகியவை மிக முக்கியமான நூல்கள். கமல் நடித்த நாயகன் தொடங்கி தனுஷ் நடித்த புதுப்பேட்டை வரை வசனம் எழுதியுள்ளார். ரஜினியின் பாட்ஷா, ஜீன்ஸ் உள்ளிட்ட 21 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பாலகுமரனுக்கு நேற்றிரவு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்களும், திரைத்துரையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்