Skip to main content

‘கருத்துரிமை போற்றுதும்’ – எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் ஒன்றுகூடல் (படங்கள்)

Published on 20/10/2018 | Edited on 20/10/2018

 

a1

 

சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. ‘கருத்துரிமை போற்றுதும்’ – எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் ஒன்றுகூடல் எனும் தலைப்பிடப்பட்ட இம்மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள் ஆகியோர் கலந்தகொண்டனர். இதில் பலபிரிவாக நிகழ்ச்சி நடைபெற்றது .

 

அதில் கௌரி லங்கேஷ் அரங்கில் இயக்க இசைவாணர்கள் பாடல்களோடு மாநாட்டிற்கு வந்தவர்களை சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் வெ.இரவீந்திரபாரதி வரவேற்றார். மாநாட்டிற்கு அமைப்பின் கவுரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையேற்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி துவக்கிவைத்து பேசினார். அவரது உரையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி மொழியாக்கம் செய்தார். ‘அறிஞர்களின் கூடல்’ எனும் நிகழ்வுக்கு எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதன் தலைமை தாங்கிட, ‘அரசியல் சாசனத்தில் கருத்துரிமை’ எனும் தலைப்பில் நீதிபதி கே.சந்துரு, ‘ஊடகச் சுதந்திரத்தின் கதி’ எனும் தலைப்பில் ஃபிரண்ட்லைன் ஆசிரியர் இரா.விஜயசங்கர் ஆகியோர் உரையாற்றினர்.

 

அல்ல்


மேடைக்கலைவாணர் என்.நன்மாறன் தலைமையில் கலகலப் போடு தொடங்கிய ‘கலைக்கூடல்’ அமர்வில், புதுகை பூபாளம் குழுவினரின் ‘அரசியல் பகடி கச்சேரி’, பிரளயன் இயக்கத்தில் சென்னை கலைக்குழுவினரின் ‘கனவுகள் கற்பிதங்கள்’ எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டன. ‘எதிர்க்குரல்களின் கூடல்’ எனும் அமர்விற்கு பேரா. அருணன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார், கவிஞர் மனுஷ்யபுத்திரன், பேரா. சுந்தரவள்ளி, ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வையொட்டி ‘கௌரி லங்கேஷ்’ கட்டுரைகள் எனும் நூலை டி.கே.ரங்கராஜன் எம்.பி., வெளியிட, எழுத்தாளர் ஆர்.நீலா பெற்றுக் கொண்டார்.

 

பத்திரிகையாளர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ‘சிறப்புக்கூடல்’ நிகழ்வில், பேரா.காஞ்சா அய்யாவின் ஆங்கில உரையை பேரா.கல்பனா கருணாகரன் மொழியாக்கம் செய்தார்.  அவரைத்தொடர்ந்து திரைக்கலைஞர் சத்தியராஜ் உள்ளிட்டோர் பேசினர். தமுஎகச மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைக்கலைஞர் ரோகிணி, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் உரையாற்றினர்.

 

நடிகர் சத்தியராஜ் பேசியபோது,  கருத்துரிமை என்பது மிக ஆழமாக சிந்தக்கவேண்டிய ஒன்று. அது சாதராமான விசயம் இல்லை .ஷாக்கரட்டீஸ் தொடங்கி கவுரிலிங்கேஸ் வரையிலும் அழிக்க அழிக்க விதைப்போன்று முளைத்துக்கொண்டே வருகிறோம். அதற்கு சான்றாகத்தான் இந்த இளைஞர்கள் கூட்டம் இங்கே கூடி இருக்கின்றது. எந்த பிற்போக்கு சிந்தனையை அறிவு பூர்வமாக கணிணி மூலம் கொண்டு செல்கிறார்களோ அதே நுட்பத்தை வைத்து ஆழமாக முற்போக்கு சிந்தனையை கொண்டு செல்ல நம்மால் முடியும் அதை செய்வதே நம்கடமையாக கொள்ளோம். 

 

ஆ

 

மனுஷ்யபுத்திரன் இந்த கருத்தரங்கில் பார்க்கும் போது,  கருத்து சுதந்திரத்திற்கு எதிராக பேசுவோருக்கு பதிலடி தரும் வண்ணம் இருப்பதை பார்க்கும் போது  எனக்கு ஒரு வினோதமான உணர்ச்சி ஏற்படுகிறது. பெண்களின் நிலையில் கேரளா மழையை வர்ணித்தபோது பல பிரச்சனைகளை நான் சந்தித்தேன்.  பல மிரட்டல்கள் பலவகையான வார்த்தைகள் கேட்கமுடியாமல் நின்ற போதும் இந்த கருத்து சுதந்திரம் இருக்கா என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும்.  அதையும் தாண்டி இந்த பணியை செய்து வருகிறோம். இது என்றும் தோற்காது என்றார்.

 

ஆளூர் ஷாநவாஸ் பேசியபோது,  இந்த கருத்துரிமை பற்றி காலம் காலமா முன்மாதிரியாக திகழும் இந்த தமிழ் நாட்டிலே கருத்துரிமை  இரண்டு பேருக்கும் மட்டுமே உண்டு. மற்றவர்கள் யார் பேசினாலும் கைது வழக்கு தான்.  அந்த இரண்டு பேர் எச் ராஜா,எஸ்.வி.சேகர் என்றார். அப்படி யில்லை.  இல்லை என்றால் நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களை கைது செய்து இருப்பார்களா, பல ஆளுநர், முதல்வர்கள், பிரதமர்கள் அத்துனைப்பேரும் தன் காளில் விழவைத்த  மிக பெரிய ஜாம்பவான் சங்கரமடத்தையே ஒரே பேட்டியில் அவர் வாயாலேயே அவரையே கைது செய்ய வைத்ததெல்லாம் அண்ணன் நக்கீரன் அவர்களுக்கு இந்த விசயம் சாதாரனம். காலையில் கைது மாலையில் விடுதலை  இனியும் நாம் மேடைகளில் மட்டுமே பேசாமல் வெகுஜனத்திடம் இந்த கருத்தை கொண்டு செல்வோம் என்று கூறினார். 

 

அ4

 

நக்கீரன் கோபால் பேசியபோது, இந்த கருத்துரிமை நம்மை ஒன்று சேர்த்துள்ளது. ஆளுநர் கொடுத்த அறிக்கையே எங்களுக்கு சாதகமாக அமைந்தது . நாங்கள் இந்த விசயத்தை சொல்ல முற்பட்டது குழந்தைகள், கறிகளை சாப்பிடும் விலங்குகளை ஒருபோதும் விட்டுவைத்ததே இல்லை. அந்த வகையில் இந்த விசயத்தை வெளிக்கொண்டுவந்தோம். இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள நிர்மலா லாக்கப் டெத் செய்ய முடிவுசெய்ய திட்டமிட்ட நிலையில் உள்ள செய்தியை அறிந்து இந்த செய்தியை வெளியிட்டோம். ராம்குமார் வழக்கையும் நாங்கள் தான் முதலில் இது கொலை என்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்தோம். அதே போல இதையும் முன்கூட்டியே செய்தோம். அவ்வளவுதான் . ஆனால் நிர்மலாவை தொட்டால் ஆளுநருக்கு எதற்கு ஷாக் அடிக்குது என்று தெரியவில்லை.  மஞ்சள் பத்திரிக்கை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் என்ன! கருத்துக்களை பேசும்போது எதற்கு கோர்ட்டில் எத்துனை பேர் வந்து வாதாடினார்கள் அதை நினைக்கும் போது சந்தோசமாக இருந்தது என்றார்.  

 

அ5

 

இதன்பிறகு மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற கருத்துரிமைப் பிரகடன நிகழ்வுக்கு நந்தலாலா தலைமையேற்றார். பறை முழங்க, படைப்பாளிகளும், கலைஞர்களும் ஏந்தி வந்த முளைப்பாரியை பெற்றுக் கொண்டு தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா மாநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் 'திருக்கார்த்தியல்' சிறுகதை - கையில் எடுத்த பிரபல இயக்குநர்

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

director sasi to direct Thirukarthiyal short story

 

சாகித்ய அகாடெமி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடெமி விருது, யுவ புரஸ்கார் மற்றும் பால புரஸ்கார் விருதுகள் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள், ’ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக பால புராஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கருக்கும் ’திருக்கார்த்தியல்' என்ற சிறுகதை தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் ராம் தங்கமுக்கும் அறிவிக்கப்பட்டது. 

 

இவ்விருது இலக்கியத் துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவதால் இரு எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினார். 

 

இந்நிலையில் ’திருக்கார்த்தியல்' சிறுகதை, தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளதாக எழுத்தாளர் ராம் தங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் என பல வெற்றி திரைப்படங்களின் இயக்குநரான சசி, கடந்த ஆண்டு திருக்கார்த்தியல் புத்தகத்தினை வாசித்து விட்டு நேரில் அழைத்து பாராட்டினார். தற்போது சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது கிடைத்ததுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை படமாக்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு என் பேரன்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Next Story

தமிழ் எழுத்தாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

cm mk stalin congrats taml writers

 

ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய புரஸ்கார் மற்றும் சாகித்ய யுவ புராஸ்கார் விருதுகள் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் இலக்கியத்துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

 

இதில் எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ’ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்கு பால சாகித்ய புராஸ்கார் விருது கிடைத்துள்ளது. மேலும் எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய ’திருக்கார்த்தியல்’ என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு எழுத்தாளர்களுக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், “நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ’ஆதனின்பொம்மை’-யை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புராஸ்கர் விருது பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கும்; இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக யுவ சாகித்ய புரஸ்கார் விருது பெற்றுள்ள ராம் தங்கம் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்” என தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.