ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டிவனம் மற்றும் காஞ்சிபுரம் கம்பன் கழகம் அறக்கட்டளை இணைந்து நடத்திய உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு 2023 காஞ்சிபுரம் ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023 மே 20, 21 ஆகிய இரு நாட்களில் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் ஆசியுடன், "தமிழ் வளர்ச்சியில் புரவலரும் புலவரும்" என்னும் தலைப்பில் நடைபெற்ற உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு - 2023 இன் நிறைவு விழா நேற்று (21. 5. 2023) நடைபெற்றது. திருக்கயிலாயப் பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20 ஆம் பட்டம் குருமகா சன்னிதானங்கள் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமை மற்றும் ஆசியுரை வழங்க, கௌமார மரபு தண்டபாணி சுவாமிகள் வழி வழி சிரவை ஆதீனம் கோவை நான்காம் பட்டம் குருமகா சன்னிதானங்கள் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஆசியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 28 வது குருமகா சன்னிதானங்கள் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் விருதுகள் வழங்கிய ஆசியுரை வழங்கினார். நிறைவு விழாவில் புதுவை அரசின் பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் முனைவர் ரா. குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.