அண்ணாமலைப் பல்கலையில் 100 சதவீத வாக்கை வலியுறுத்தி உலக சாதனை நிகழ்ச்சியில 8,017 மாணவ மாணவிகள் பங்கேற்று சாதனை.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து வாக்காளர் விழிப்புணர்விற்காக 100 சதவீத வாக்கை உறுதிபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் 8017 பேர் பங்கேற்றனர். இதில் VOTE என்ற வடிவில் மாணவ மாணவிகள் நின்று 100 சதவீத வாக்கை வலியுறுத்தியும் நேர்மையான நபரை தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், சார் ஆட்சியர் விசுமகாஜன், சிதம்பரம் கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது உலக சாதனை நிகழ்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.