Skip to main content

பாதுகாப்பின்றி சாக்கடையில் இறங்கிக் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள்!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Workers who go down the drain without protection and scoop waste

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சைதாப்பேட்டை 35 வது வார்டு பகுதியில் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இன்று அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதாள சாக்கடை கழிவு நீர் கால்வாய் அடைப்பை அகற்ற வேலூர் மாநகராட்சியில் உள்ள பிரத்யேகமான வாகனத்தை அருகிலேயே நிறுத்திவைத்துக்கொண்டு வயதான தூய்மை பணியாளர்கள் இருவர் பாதுகாப்பு உபகாரணங்கள் இன்றி அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக அதில் ஓர் முதியவர் பாதாள சாக்கடைக்குள்ளேயே இறங்கி எந்த வித பாதுகாப்பும் இன்றி வெறும் கைகளால் கழிவுகளை எடுத்து போடும் அவலக்காட்சி அரங்கேறி உள்ளது. நவீன இயந்திரம் இருந்தும் இதுபோன்ற செயல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து முறைபடுத்தப்பட வேண்டியது அவசியம் என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

Workers who go down the drain without protection and scoop waste

மனிதர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்கி கழிவுகளை அகற்றக்கூடாது என்கிற சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டம் குறித்து அதிகாரிகள் நன்றாக தெரிந்தும் இப்படி பாதாள சாக்கடைக்குள் ஆபத்தான முறையில் உள்ளே இறங்கி வேலை செய்ய வைப்பது தொடர்கதையாகவே உள்ளது. சட்டத்தை மதிக்காமல் இப்படி செய்யும் அதிகாரிகள் குறைந்தபட்சம் அந்தத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கலாம், அதையும் செய்வதில்லை எனக் கூறுகின்றனர் தொழிலாளர் தரப்பினர்.

இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள்தான் இதனைக் கண்காணிக்க வேண்டும் ஆனால் அவர்களே தவறு செய்ய வைக்கிறார்கள். இதைக் கண்டிக்க வேண்டிய மேயர் கண்டுக்கொள்ளாமலேயே இருப்பது வேதனைப்படுத்துகிறது என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்