மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி கன்னியாகுமாி காந்தி மண்டபத்தில் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் விழுந்த அதிசய சூாிய ஔியை ஆயிரக்கணக்கானோா் கண்டு ரசித்தனா்.
மகாத்மா காந்தியின் அஸ்தி 1948-ம் ஆண்டு பிப்ரவாி 2-ம் தேதி கன்னியாகுமாி கடலில் கரைப்பதற்கு முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடற்கரையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் 79 அடி உயரத்தில் காந்தி நினைவு மண்டபம் கட்டப்பட்டு 1956-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
ஆண்டுத்தோறும் காந்தி பிறந்த நாளான அக்டோபா் 2-ம் தேதி காந்தி நினைவு மண்டபத்தில் அஸ்தி வைக்கப்பட்டியிருந்த இடத்தில் அதிசய சூாிய ஒளி விழுவது வழக்கம். அதே போல் இன்றும் அதிசய சூாிய ஒளி விழுந்தது. அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரோ, எஸ்.பி. ஸ்ரீநாத் ஆகியோா் மாலை அணிவித்து மாியாதை செய்தனா்.
இந்த அதிசய சூாிய ஒளி ஏராளமான பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனா்.