Skip to main content

நரபலி கொடுத்தும் அடங்காத ஆசை; உடலை சமைத்து சாப்பிட்ட கும்பல்

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

womens sacrifice for money in keralaa

 



கேரளா மாநிலம் எர்ணாகுளம் திருவாழா பகுதியில் கடந்த சில தினங்கள் முன்பு பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்பட்டு மசாஜ் சிகிச்சை செய்து வரும் மருத்துவர் ஒருவர் தனது மனைவி மற்றும் தரகர் ஒருவருடன் சேர்ந்து 50 வயதுடைய இரண்டு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   

 

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், பக்வந்த் சிங் மற்றும் லீலா தம்பதிக்கு முகமது ஷபி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரிடம் தங்களது ஆசையை கூற முகமது ஷபி ஒரு யோசனையை சொல்லியுள்ளார். அதன் படி நரபலி கொடுத்தால் பணக்காரராக வாழலாம் என்றும் தொடர்ந்து தம்பதியை மூளைச்சலவை செய்து வந்துள்ளார். இறுதியில் தம்பதிகள் ஒப்புக்கொண்டனர். இதன் பின் அந்த தரகர் கடவந்தரா பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க லாட்டரி விற்கும் ரோஸ்லின் என்ற பெண்ணை அழைத்து வந்துள்ளார். 

 

சில தினங்களில் லாட்டரி விற்கும் பெண்ணை காணவில்லை என கூறி அவரது உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண் நரபலி கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. காவல் துறையினர் பக்வந்த் சிங், லீலா தம்பதியிடம் மேற்கொண்ட விசாரணையில் அப்பெண்ணை பக்வந்த் சிங்கின் வீட்டிற்கு தரகர் மூலம் அழைத்து வந்து மூவரும் சேர்ந்து நரபலி கொடுத்தது தெரியவந்தது. 

 

லாட்டரி விற்கும் ரோஸ்லினை நரபலி கொடுத்த பின் உடலை 56 துண்டுகளாக வெட்டி ஆள்நடமாட்டமற்ற பகுதியில் புதைத்துள்ளனர். அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை மேலும் விசாரித்தனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.

 

முதல் பெண்ணை ஜூலை மாதம் நரபலி கொடுத்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் பத்மா எனும் தமிழகம் தர்மபுரியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை நரபலி கொடுத்துள்ளனர். இந்த பெண்ணும் லாட்டரி விற்பனை செய்யும் பெண். இவரையும் அந்த தரகர் தான் அழைத்து வந்துள்ளார். இவரையும் 56 துண்டுகளாக வெட்டி ஆள் நடமாட்டமற்ற பகுதியில் மூவரும் சேர்ந்து புதைத்துள்ளனர் .

 

தம்பதிகள் கொடுத்த வாக்குமூலத்தில் பத்மாவின் உடலை புதைப்பதற்கு முன் பூஜையில் திருப்தி அடையாததால் அவர் உடலில் வெட்டிய துண்டுகளை சமைத்து சாப்பிட்டதாக கூறினர். 

 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் நரபலி நடந்த பகுதிக்கு சென்று உடல்களை தோண்டி எடுத்து விசாரித்தனர். உடல்கள் துண்டு துண்டுகளாக இருந்ததால் அடையாளம் காட்டுவதில் உறவினர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதனால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள உடல்களை எடுத்துச்சென்றனர். 

 

இதனை அடுத்து பக்வந்த் சிங், லீலா மற்றும் தரகர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்