Skip to main content

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்; 2 ஆம் கட்ட விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

Womens Entitlement Scheme Phase 2 application distribution begins today

 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் முதற்கட்ட விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்துப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ரேசன் கடைகள் மூலம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

 

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான 2 ஆம் கட்ட விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 4 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யும் பணி நடைபெறும். அதனை தொடர்ந்து  5 ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணி  தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்