Skip to main content

பெண்கள் கரும்பு அல்ல, இரும்பு...சுவைக்க நினைப்பவர்களுக்கு காலம் வந்துவிட்டது- தமிழிசை

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
tamilisai


பெண்கள் கரும்பு என்பதால் ஆண்கள் அவர்களை சுவைத்து பார்க்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
 

”பெண்கள் கரும்பு போன்றவர்கள் அல்ல இரும்பு போன்றவர்கள் என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது, மீடூ இயக்கம் பெண்களுக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது. திரையுலகில் இருக்கும் பெண்களுக்கு என்று கமிட்டி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, ”பெண்கள் இரும்பு தன்மையுடன் இருக்க வேண்டும். பெண்கள் கரும்பு போன்று இருக்கிறார்கள் என்று சிலர் சுவைத்து பார்க்க நினைக்கிறார்கள். பெண்கள் கரும்பு தன்மையுடன் இருக்கிறார்களா? இல்லை இரும்பு தன்மையுடன் இருக்கிறார்களா? என்பதை நிருபிக்கும் காலம் வந்துவிட்டது. ஆனாலும், இதில் சின்ன புகார் வந்தாலும் அதை விசாரிக்க வேண்டியது நம் சமூகத்தின் கடமை. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்கள் துதிக்கப்பட வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது என்பது என் கருத்து” என்று கூறியுள்ளார்.
 

மேலும், சபரிமலை விவகாரம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து பற்றி கேட்டபோது,” அவர் அந்த தீர்ப்பை வரவேற்று இருந்தாலும், ஐதீகத்தை மதிக்க வேண்டும் என்ற தீர்வையும தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்