பெரம்பலூரில் நேற்று கஞ்சா கடத்தி வந்த காரை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். இது தொடர்பாக திருச்சியில் போதை தடுப்பு பிரிவு பெண் எஸ்.ஐ. வீட்டில் அதிரடியாக நுழைந்து விசாரணை செய்தது போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.ஐ. புவனேஸ்வரி தில்லை நகர் காவல் நிலையத்தில் வேலை செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணி மாற்றம் செய்யப்படார். அதன்பிறகு போதை தடுப்பு பிரிவில் எஸ்.ஐ.யாக தற்போது உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமயபுரம் அருகே கஞ்சா கடத்தி வந்த காரை மடக்கி பிடித்து அதிலிருந்து 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியான ஆந்திரா குண்டூரை சேர்ந்த சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தற்போது புதுக்கோட்டை மாவட்டம் போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சத்தியமூர்த்தியின் அண்ணன் பிரவீன் குமார் ரெட்டி இந்த வழக்கு விசாரணைக்காக புவனேஸ்வரியிடம் அடிக்கடி பேசி கொண்டிருந்தால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளார் .
இந்தநிலையில் பிரவீன் குமார் ரெட்டி திருச்சி பீமநகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் எஸ்.ஐ. புவனேஸ்வரி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால் இது சம்பந்தமாக கமிஷனுக்கு ஏற்கனவே ரகசிய புகார் சென்றுள்ளது. இதையடுத்து எஸ்.ஐ. புவனேஸ்வரியை முழுமையான கண்காணித்து உள்ளனர். அப்போது அவர் அடிக்கடி ஆந்திராவுக்கு பேசியது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த ஒரு காரை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கஞ்சா கும்பல் குற்றவாளிகளுக்கும் சத்தியமூர்த்திக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் எஸ்.ஐ. புவனேஸ்வரி வசித்து வந்த வீட்டிற்கு கண்டோன்மென்ட் உதவி கமிஷனர் மணிகண்டன், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.
போலிஸ் நுழைந்த வீட்டில் பிரவீன் குமார் ரெட்டி இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது அவருக்கும் பெரம்பலூர் முக்கிய கடத்தல் கும்பலுக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிந்தது. அதன் பிறகு தொடர் விசாரணையில் எஸ்.ஐ. புவனேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டுப் பிரிந்து தற்போது கஞ்சா வழக்கில் விசாரணைக்கு வந்து சென்றது பிரவீன் குமாருடன் குடும்பத்துடன் நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் புவனேஸ்வரி ஏற்கனவே சிட்டி இன்ஸ்பெக்டர் ஒருவருடன் தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் கஞ்சா கடத்தலை கண்டு பிடிக்கப் போய் கள்ளகாதல் வெளிச்சத்துக்கு வந்ததால் போலீசார் தலையில் அடித்துக்கொண்டு வெளியேறினார்கள்.
இந்த நிலையில் விசாரணையில் போலிசார் கஞ்சா கடத்தலுக்கு ஆந்திராக்காரர்கள் எஸ்.ஐ. பயன்படுத்தி உள்ளார்கள். எஸ்.ஐ. மூலம் ஆந்திராவிலிருந்து மதுரை, புதுக்கோட்டை, கடந்த 1 வருடத்திற்கு அதிக அளவில் கஞ்சா கடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் திருச்சி மாநகர கமிஷனர் அமல்ராஜ் ஏடிஜிபி ஷகில்அக்தருக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் போலிஸ் குடியிருப்பையும் காலி செய்யவும் உத்தரவிட்டுள்ளார் எனக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள் !
இவர் தில்லைநகரில் எஸ்.ஐ.யாக இருக்கும் போதே சில ரவுடிகள் என்னை ஆபாசபடம் எடுத்து மிரட்டுகிறார்கள் என்று புகார் கொடுத்தார். ஆனால் ரவுடியோ என்னுடன் பழகி என்னை ஏமாற்றிவிட்டார் என்று புகார் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.