தேனி மாவட்டம் கொடுவில்லார் பட்டி அடுத்த நாகலாபுரத்தை சேர்ந்தவர் டிக் டாக் சுகந்தி. இவர் டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோவால் ஏராளமானவர்கள் இவரை டிக் டாக்கில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் சுகந்தி ஆண் நண்பர்களுடன் அதிகளவில் பழகியதாக சொல்லப்படுகிறது. பின்பு நெட்டிசன் ஒருவர் சுகந்தி குறித்தும், நாகலபுரத்து பெண்கள் குறித்தும் தகாத வார்த்தைகளால் பேசி வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகலாபுரம் கிராம பெண்கள், பி.சி.பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சுகந்தியை ஊரை விட்டு வெளியேற்ற வலியுறுத்தினர். டிக் டாக்கில் சுகந்தியின் செயல்பாடுகளால் கிராமத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பின்பு சுகந்தி மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனையடுத்து சுகந்தியின் நடவடிக்கை ஊருக்கு அவபெயரை கொடுத்ததால், கோபமான ஊர் பொதுமக்கள் சுகந்தி மற்றும் அவரது சகோதரியை ஊரை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதன்பின்னர் தன்னை ஊரை விட்டு விரட்ட காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களுக்கும், சுகந்திக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்ததாகவும், இதன் காரனமாக தனது புதிய ஆண் நண்பர்களுடன் இணைந்து கூலிப்படை மூலம் அவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் டிக்டாக்கில் வெளியான ஆடியோ உரையாடல் ஒன்றின்மூலம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக் டாக்கால் சமூகத்தில் ஏற்படும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.