Skip to main content

பொங்கல் பரிசு தொகுப்பும்; பெண்கள் புன்னகையும்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

Women buy Pongal gift sets with smile

 

ஈரோடு மாவட்டத்தில் 7.47 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கிஷ்ணனுன்னி தெரிவித்தார். 

 

ஈரோடு கொல்லம்பாளையம் வண்டிக்காரன்பேட்டை பகுதியிலுள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைத்தார்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கிஷ்ணனுன்னி நேற்று தொடங்கி வைத்தார். 

 

அதன் பிறகு பேசிய அவர், “தைப்பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாட முதலமைச்சர் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஆறடி கரும்பு, ரூபாய் ஆயிரம் ரொக்கம் என அரிசி அட்டை வைத்துள்ளவர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு ரூபாய் 80கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 868 முழு நேர நியாய விலைக் கடைகளும் 319 பகுதிநேர கடைகளும் உள்ளன.  இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 7.65 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க டோக்கன்கள் ஜனவரி 3 முதல் 8 வரை வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பிற்காகத் தரமான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவுரைப்படி ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து ரேஷன் கடையிலும் தரப்படுகிறது. அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று பாதுகாப்பாக பரிசுத்தொகை பெற்று வருகிறார்கள்” என்றார்.

 

ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை முகமலர்ச்சியோடும் புன்னகையுடனும் பெண்கள் பெற்றுச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்