Skip to main content

கடன் தொல்லையால் ஏ.டி.எம்-ல் கொள்ளை முயற்சி; பெண் கைது

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

nn

 

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளம் அடுத்த ஈ.பி. நகரில் தனியார் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் இயந்திரத்தின் வயர்களை பெண் ஒருவர் அறுத்து கொண்டிருப்பதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம் மையத்தில் உள்ள ஒயரை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

போலீசார் உடனே அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் நசீமா பானு என்பதும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனது மகனுடன் வசித்து வருவதும் தெரியவந்தது. கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு அவரின் கணவர் இறந்து விட்டதால் வறுமை காரணமாக அவர் தறிபட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியின்றி பணம் திருட முடிவு செய்துள்ளார்.

 

இந்நிலையில் தான் ஈரோட்டில் உள்ள தனியார் ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து நசீமா பானுவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து வயர் கட்டர் மற்றும் சுத்தியலை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏ.டி.எம்.மில் பெண் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்