Skip to main content

‘சிங்கத்த எப்படியாவது கரெக்ட் பண்ணனும்’ - காவல் அதிகாரிக்கு வலை விரித்த பெண்; அதிர வைக்கும் ஆடியோ

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

nn

 

தமிழ் சினிமாக்களில் பெண்கள் உயர் அதிகாரிகளை தங்களுடைய காதல் வலையில் சிக்க வைத்து தனக்கான தேவைகளை பூர்த்தி செய்வது போல் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் நிஜமாகவே காவல் அதிகாரி ஒருவரை தன்னுடைய காதல் வலையில் சிக்க வைக்க பெண் ஒருவர் பயன்படுத்திய யுக்தியைக் கண்டு காவல்துறையினரே கொஞ்சம் ஆடிப்போய்தான் இருக்கிறார்கள்.

 

திருச்சியில் உள்ள ஒரு காவல் அதிகாரியின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்ட கிரிஜா(24) என்ற இளம்பெண், அவரிடம் வாட்ஸ்ஆப் மூலம் உதவி கேட்பது போல் தன்னுடைய பேச்சைத் துவங்கியவர், நாளடைவில் அதிகாரி குறித்த சில தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு அவருக்கு காதல் வலை வீச ஆரம்பித்துள்ளார். இதனால் கடுப்பான அதிகாரி, ‘என்னுடைய செல்போன் எண்ணை உனக்கு யார் கொடுத்தது’ என்று கேட்க, ‘நான் ஸ்டேசனில் வாங்கினேன்’ என்று கூறி தன்னுடைய பேச்சைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து அந்த அதிகாரிக்கு வாட்ஸ்ஆப் மூலம் குறுந்தகவல்களை அனுப்பி தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு அந்த அதிகாரி தனக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது. உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உதவி செய்கிறேன். எனக்கு இந்த காதல் இதெல்லாம் பிடிக்காது என்று மறுத்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்தும் அந்த பெண் விடாமல் அவரை சிங்கம் படத்தில் வரும் சூர்யாவை போல நீங்க அழகாவும், கம்பீரமான மீசையும் வச்சிருக்கிங்க. நான், உங்கள பாக்குறதுக்காகவே தினமும் ஜிகர்தண்டா கடைக்கு அருகில் வந்து காத்திருப்பேன். ஆனா நீங்க வர மாட்டிங்க. உங்களை நேர்ல பாக்கும்போது எனக்கு பேச்சே வர மாட்டேங்குது. என்று தன்னுடைய காதல் ரசத்தை பிழிந்துள்ளார். அதோடு காதலின் உச்சத்திற்கே சென்று நீங்க எனக்கு வேணும் என்று கூறியிருக்கிறார். அதோடு மற்றொரு அதிகாரியை குறித்தும் ஒரு தகவலை பரிமாறி உள்ளார். அதில் தன்னுடைய உறவுக்கார பையனுடைய திருமண விழாவில் தங்க செயின் காணாமல் போனது குறித்து புகார் அளிக்க நான் உயர் அதிகாரி ஒருவரை சந்திக்க சென்றேன். புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு அனுப்பியவர் அதோடு நிறுத்தவில்லை. அவருடன் இருப்பதற்காக என்னை அழைத்தார், ஆனால் எனக்கு அவருடன் இருக்க விருப்பம் இல்லை. எனக்கு உங்களுடன் தான் இருக்க வேண்டும் என்று அந்த குறுந்தகவலில் கூறியுள்ளார்.

 

அதேபோல் தன்னுடைய தோழி ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'நான் சிங்கத்தை எப்படியாவது கரெக்ட் பண்ண ஐடியா கொடு, என்னைய அவர் பார்க்கவே மாட்டேங்கிறாரு' என்று கூறியுள்ளார். அதற்கு அவருடைய தோழி 'நீ உடம்பில் அவருடைய பெயரை பச்சை குத்திக்கோ' என்று கூறியவுடன், பச்சையை எங்க குத்திக்கலாம் என்று கேட்ட அவர், நான் உன்ன மாதிரி இடுப்புக்கு கீழ் குத்திக்கமாட்டேன், சிங்கம் கட்டும் தாலிதான் என்னுடைய நெஞ்சுல இருக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனால் அவர் ஒத்துவர மாட்டேங்கிறாரு, தாலிதான் கட்டிக்க முடில, அவரு பேரையாவது நான் மார்புல குத்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதோடு விடாமல் எனக்கு என்னடி குறைச்சல், நல்ல வீட்டுவேல பார்ப்பேன், சாமி கும்பிடுவேன், நல்லா படிப்பேன், உயரம் தான் கொஞ்சம் கம்மி இந்த மனுஷன் அதை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாரு என்று கூறி அவர்கள் இருவரும் பேசும் ஆடியோ நீண்டு கொண்டே செல்கிறது.

 

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த பெண் தனியாக வசித்து வரும் நிலையில் தன்னுடைய மாமா மகனை வீட்டுக்கு வரச்சொல்லியுள்ளார். இந்நிலையில் அவர் தன்னை கெடுத்துவிட்டதாக போலீஸ் கமிஷனரிடமும் புகார் கொடுத்துள்ளார். அந்த வழக்கில் இந்த பெண் தான் அவரை வரச்சொன்னார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு காவல்துறை அதிகாரிக்கு வலை வீசி உள்ளார். இதுபோன்ற பல ஆண்களுடன் தொடர்பிருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய காதல் வலையை வீசி பலரை சிக்கவைப்பதே தொழிலாக கொண்டுள்ளார்.

 

இவரை கொண்டு தங்களுடைய வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள திட்டமிட்ட ஒரு வழக்கறிஞர்கள் கும்பலும், ஒரு டுபாக்கூர் பத்திரிகைகாரரும் வேண்டுமென்றே அந்த அதிகாரியை இந்த பெண்ணிடம் சிக்க வைத்து தரக்குறைவாக சித்தரித்து அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதாக்குறைக்கு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு பக்க மனுவுடன் வந்திருந்த அப்பெண் தன்னை இன்ஸ்பெக்டர் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு ஒன்றை அளித்துள்ளார். அதிகாரிகளில் ஒரு சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னுடைய நேர்மையை விட்டுக்கொடுத்து தனக்கு மேல் இருக்கும் அதிகாரியின் உத்தரவை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், இதுபோன்ற சில நேர்மையான அதிகாரிகளையும் மற்றொரு கும்பல் இதுபோன்ற பெண்களை கொண்டு அந்த அதிகாரியின் பெயரை கலங்கடிக்க செய்தும் வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்