Published on 28/10/2023 | Edited on 28/10/2023

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. புனிதா மூத்த மகள் வீட்டில் சில காலமும் இளைய மகள் வீட்டில் சில காலமும் மாறி மாறி வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று குளியல் அறைக்குச் சென்ற புனிதா தவறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது இடது பக்கம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுய நினைவின்றி கிடந்தார். புனிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புனிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.