
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், நேற்று காலை பூஜை செய்வதற்காக அர்ச்சகர் கோவிலை திறந்து கருவறைக்குச் சென்றபோது அங்கு உற்சவர் ஸ்ரீதேவி கழுத்தில் நிரந்தர சாற்றுப்படியாக அணிவித்திருந்த நான்கு கிராம் தங்க காசுகள் காணாமல் போய் இருப்பது தெரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர் கோவில் செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பெயரில், கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடந்த ஒன்றாம் தேதி காலை 6 மணி அளவில் கோவிலின் உள்ளே சாமி கும்பிடுவது போல் புகுந்த பெண் ஒருவர், யாரும் வராததை உறுதி செய்த பின்னர், வேகவேகமாக கருவறையின் உள்ளே சென்று சாமி கழுத்தில் அணிவித்திருந்த தங்க காசுகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, கோவிலின் செயலாளர் கொடுத்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மணலூர்பேட்டை போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து திருடியதைத் தேடத்துவங்கி வருகின்றனர்.