Skip to main content

“ஊர் கட்டுப்பாடு; உங்க தெரு பசங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது...” பட்டியலின மாணவர்களிடம் தீண்டாமையை கடைபிடித்த கடைக்காரர்

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

Woe to the students in the "we will not give snacks to your street rascals" list

 

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே ஊர்க் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறி பெட்டிக்கடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம்  கிராமத்தில் பள்ளிக்கு சென்ற பட்டியலின மாணவர்கள் அந்த ஊரில் இருக்கும் பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்றபோது அந்த கடையில் இருந்தவர் அவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான வீடியோவில் அந்த கடைக்காரர் மாணவர்களிடம் பேசும் காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

 

அந்த வீடியோ பதிவில், “போங்க போய் உங்க வீட்ல போய் சொல்லுங்க. தின்பண்டம் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு. தின்பண்டம் கொடுக்க மாட்டாங்க டா. ஊர்ல கட்டுப்பாடு  வந்துருக்கு. ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கு உங்க தெருவுல யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாதுனு சொல்லி... இனிமே இங்க யாரும் வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். போங்க” என பேசப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படும் இந்த பதிவு பல்வேறு தரப்பினர் இடையே பல கண்டனங்களை  பெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்