ஆறுகள், ஏரிகள், குளங்களை, தூர்வாரிவிட்டோம், தண்ணீர் உடைப்பு ஏற்படாது, வெள்ளபாதிப்புக்கு தயாராக இருக்கிறோம், என கலர்,கலராக பேட்டிகளை கொடுத்துவருகின்றனர் அதிமுக அமைச்சர்களும், அதிகாரிகளும். ஆனால் கல்லணையில் இருந்து தண்ணீர்திறந்து மூன்றாவது நாளே உடைப்பு ஏற்பட்டுவிட்டது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த 19 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது, அந்த தண்ணீர் கல்லணைக்கு 22 ம் தேதி வந்தடைந்ததும் அவசர அவசரமாக கல்லணையை திறந்தனர் அதிமுக அமைச்சர்களும் அதிகாரிகளும். அப்போது பேட்டியளித்த ’’அமைச்சர்கள், ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் அனைத்தும் கிளீனா தூர்வாரியாகிடுச்சி. நான்கு நாட்களில் தண்ணீர் கடைமடைக்கு போய்விடும்’’ என்றனர்.
ஆனால் தண்ணீர் திறந்துவிடப்பட்டு இரண்டாவது நாளே பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுவிட்டது. தஞ்சை அருகே உள்ள கல்விராயானேட்டையில் கல்லணை கால்வாயில் 20 அடிக்கு உடைப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் டிராக்ட்டர் மூலம் மண் கொண்டுவந்து கொட்டியும் அடைக்கமுடியவில்லை, பிறகு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அடைத்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘’ ஆறுகள், வடிகால், வாய்க்கால் எதுவுமே முறையா தூர்வாரல, காவிரி, கல்லணை கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் பல இடங்கள் பல்கீனமாக இருக்கிறது, திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வாங்கமுடியாமல் உடைப்பு ஏற்படுகிறது. தூர்வாரும் பணையை முகத்துவாரங்களில் மட்டும் செய்துவிட்டு விட்டுவிட்டனர், அதன் விளைவு உடைப்பு ஏற்படுகிறது, தற்போது கொள்ளிடத்தில் அதிக தண்ணீரை திறந்து கடலுக்கு அனுப்பபோறாங்க. நிர்வாகம் தெரியாத வாய்சவடால் அரசாகவே அதிமுக அரசு இருக்கிறது.’’ என்றனர்.