மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
![puducherry](http://image.nakkheeran.in/cdn/farfuture/-CCsL-hgb4HEGIQ6sEYKZ7btlKH3hr11S_-zsxrN2cg/1558444159/sites/default/files/inline-images/puduchery_1.jpg)
புதுச்சேரி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆண்கள் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரண்டு வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரியான அருண், வாக்கு எண்ணிக்கைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அருண், "வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23 -ஆம் தேதியும், அதற்கு மறுநாளும் புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படும்.
புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதியின் கீழ் 30 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்ஏற்படும். தேவைப்பட்டால் 144 தடை விதிக்கப்படும்" என்றார்.
மேலும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு துவங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.