Skip to main content

தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம்! - ஜவாஹிருல்லா 

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

will struggle with Secretariat  ! - Jawahirullah
கோப்புப் படம் 

 

“நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நிர்வாகக் குழுக் கேட்டுக் கொண்டது. த.மு.மு.க.வின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் வருகிற செப்டம்பர் 30 அன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளோம் என த.மு.மு.க.வின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். 

 

மேலும் அவர், “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் காணொளி வாயிலாக எனது தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த ஜூலை 9 அன்று கோவை மத்தியச் சிறை முற்றுகைப் போராட்டம் நடத்தியது. தமிழ்நாடு அமைச்சரவை கூடி நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு வழிவகுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் இறுதியில் ஒரு மாதத்திற்குள் நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகள் 36 பேரை விடுதலை செய்வதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லையெனில் தலைமைச் செயலகம் நோக்கி அடுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தோம். 

 

ஒரு மாதம் கடந்த பிறகும், முஸ்லிம் சிறைவாசிகளின்  விடுதலை தொடர்பாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்தச் சூழலில் நீதியரசர் ஆதிநாதன் பரிந்துரையின் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நிர்வாகக் குழுக் கேட்டுக் கொண்டது. த.மு.மு.க.வின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் வருகிற செப்டம்பர் 30 அன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதென எனது தலைமையில்  நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்