Published on 22/09/2018 | Edited on 22/09/2018

மனைவி மற்றும் குழந்தையை எரித்துக்கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அழகாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் மனைவி பூமதி மற்றும் நிலாஸ்ரீ, பூவரசன் ஆகிய இரண்டு குழந்தைகளை மண்ணென்ணெய் ஊற்றி எரித்தார். இதில் படுகாயம் அடைந்த பூமதி, நிலாஸ்ரீ சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். பூவரசன் பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் பூமதி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் கார்த்தியை போலீசார் கைது செய்தனர்.