சென்னை நகரின் பல பகுதிகளில் பரவலாக மழை
வெப்பச் சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில், மெரீனா கடற்கரை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதேபோன்று, சேப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, அண்ணாசாலை பகுதிகளிலும் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து,