2017ம் ஆண்டு பாலஸ்தீன விடு்தலைக்காக பேசியதாக மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது உபா சட்டம் கடந்த வாரம் நுங்கம்பாக்கம் காவல்துறையினாரால் போடப்பட்டது. இந்த வழக்கு குறித்தான விசாரணை எழும்பூர் மாஜிஸ்திரேட் ஜோஸ்லின்மேரி முன்பு விசாரணைக்கு வந்தது. திருமுருகன் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இந்த சட்டமானது பொருந்தாது எனவும் காவல்துறை பதிவு செய்திருக்கும் தேதி என்பது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருமுருகன் காந்தி சிறையில் இருந்தார். 2014 முதல் 2018 வரை 4 ஆண்டு காலமாக வெளியில் இருந்து திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்யாமல் தற்போது வழக்கு பதிய என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். மனித உரிமை மீறலாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளூக்காக திருமுருகன் காந்திக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த உபா சட்டத்தின் கீழ் வழக்கை தள்ளூபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அரசு சார்பில் வழக்கறிஞர் நேரம் கேட்டு காவல்துறையிடம் அளித்திருந்தார். உபா சட்டம் என்பது இந்த வழக்கின் கீழ் பொருந்தாது எனவும் அதை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். அதன்பின்னர் வந்த வழக்கறிஞர் கால அவகாசம் கோரினார். அதனால் வழக்கு செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.