அரசு மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும், திருவாடனை எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சினிமா பிரபலம் என்பதால் கருணாஸை அவருக்கு நெருக்கமானவர்கள் அடிக்கடி சென்று சந்திப்பார்கள் என்பதால்தான், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.
வேலூர் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்படும் கைதிகளுக்கான பிரிவில் கருணாஸ் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கருணாஸ் எம்எல்ஏவாக இருப்பதால் அவருக்கு ஏ கிளாஸ் வசதி அளிக்க வேண்டுமா என்பது குறித்து சிறை அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.
ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே கருணாஸ்க்கு ஏ கிளாஸ் வசதி அளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.