
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சில நாட்களாக கொங்கு நாடு தொடர்பான விவாதத்தைப் பாஜகவைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறார்கள். இதற்கு மற்ற கட்சியினர் கடும் பதிலடிகளைக் கொடுத்துவருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவினருடைய இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கொங்குநாடு என்றவுடன் ஏன் பயம் வருகிறது. பயமே தேவையில்லை அவர்களுக்கு. எல்லாம் தமிழ்நாடுதான். ஆனால் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆந்திரா இரண்டாகப் பிரிந்திருக்கிறது. உத்திரப்பிரதேசம் இரண்டாகப் பிரிந்துள்ளது. மாநில மக்களின் எதிர்பார்ப்பு இதுதான் எனில் அதைச் செய்ய வேண்டியது அரசின் கடமை'' என்றார்.