Skip to main content

இணையதளத்தில் தனியார் பள்ளி கட்டணம் வெளியிடாதது ஏன்?  அரசை வலியுறுத்த ஸ்டாலினுக்கு இளையதலைமுறை கோரிக்கை

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
s s

 

தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை வரையறுக்க அமைக்கப் பட்ட குழுவை முறையாக செயல்படுத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை வலியுறுத்த வேண்டும் என்று இளையதலைமுறை அமைப்பு கோரிக்கை வைத்திருக்கிறது.  


 
தனியார் பள்ளியில் கட்டண கொள்ளையை தடுக்க கல்வி கட்டண நிர்ணய குழுவை அமைக்க அரசை வலியுத்த கோரி இளையதலைமுறை அமைப்பு மு.க.ஸ்டாலினை சந்தித்தது. அது குறித்து அந்த அமைப்பை சேர்ந்த சங்கர்,  

“தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வரும் நிலையில் திமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்கும் வகையில் “கல்வி கட்டண நிர்ணய குழு” செயல்படுத்தப் பட்டது. ஆனால் தற்போது அந்த குழுவானது சரியாக செயல்படாமல் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளி கட்டண விவரங்களை ஏப்ரல் 30ஆம் தேதிகுள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. கல்வி கட்டண நிர்ணய குழுவை நேரில் சென்று வலியுத்தி இருந்தோம்.  ஆனால் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க பட இருக்கிறது. மாசிலாமணி குழு நியமித்தே ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இது வரை எதுவும் செய்யவில்லை. பள்ளிக்கல்வி துறையும் இதுவரை இணையதளத்தில் தனியார் பள்ளி பள்ளி கட்டணம் வெளியிடாமல் இருக்கிறது. திமுக தரப்பில் இதை அரசுக்கு வலியுறுத்த கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்து இருக்கிறோம்.

 

திமுக ஆட்சி காலத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் இதற்குள் அடங்கும் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் சி‌பி‌எஸ்‌சி தரப்பு நீதிமன்றம் சென்றது.  உயர் நீதிமன்றம் சி‌பி‌எஸ்‌சி பள்ளிகளுக்கும் சேர்ந்து நிர்ணயிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து சி‌பி‌எஸ்‌சி தரப்பு உச்ச நீதிமன்றதில் மேல் முறையீடு செய்தது. 2016 உச்ச நீதிமன்றம் கட்டண நிர்ணயம் தேவை இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதை எதிர்த்து தமிழக அரசு எந்த விதமான மேல்முறையீடும் செய்யாமல் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது” என்றார்.  
 

சார்ந்த செய்திகள்