Skip to main content

நாம் தமிழர் கட்சி பொது கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது ஏன்? கோவை காவல்துறை பதிலளிக்க உத்தரவு

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
kovai

 

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக  பொது கூட்டம் நடத்த  அனுமதி மறுத்ததை எதிர்த்த மனுவுக்கு ஒரு வாரத்தில்  பதில் அளிக்க கோவை மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காமராஜர் பிறந்த நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சி சார்பில்  ஜூலை மாதம் 15 ம் தேதி  கோவை, கணபதி பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடத்த  கோவை மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து கோயம்புத்தூரை சேர்ந்த நாம் தமிழர் கோவை மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு   வரும் 29ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த  மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க கோவை மாவட்ட  காவல்துறை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்