திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் 114 ஆடுகளை திருடியதாக திருடன் மயக்க பிஸ்கட் கொடுத்து கடத்தல் சம்பம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் சுமார் 300 வீடுகள் உள்ளன இந்நிலையில் அதிகாலை நேரங்களில் தொடர்ச்சியாக ஆடுகள் காணமல் போயிக்கொண்டே இருந்தன.
இந்த நிலையில் திடீர் என அதிகாலை நேரத்தில் 4 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடுகளை இருமர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் திருட முயன்றனர். அப்போது ஆடு கத்தியதால் அப்பகுதியினர் விழித்துக்கொள்ள திருட வந்த இடத்தில் நண்பனை கழட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆசாமி தப்பிவிட மற்றொருவன் பொதுமக்களிடம் சிக்கி விட்டான்.
அவனைப் பொதுமக்கள் பிடித்து கைகளை கட்டிப்போட்டு நையப்புடைத்தனர். இதனிடையே சீருடை அணியாத இரு காவலர்கள் அவனை அடிக்காதீர்கள் என தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் மரக்கடை சேர்ந்த சேட்டு என்றும் அவன் பிரபல வீடு புகுந்து திருட்டு கொள்ளையன் என்பதும். திருச்சி பெரிய செட்டி தெரு கோவிந்தன் மகன் பிரபு என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவன் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் இதுவரை 114 ஆடுகள் களவு போயுள்ளதாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆடு திருவதற்கு இவர்கள் புது மாதிரியான டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆடுகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கடத்தினால் எந்த பிரச்சனையும் வராது என்று மயக்க பிஸ்கெட் கொடுத்து கடத்துவதை வழக்கமா வைத்திருக்கிறார்கள் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளிவந்த குற்றவாளி இவன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.