வருகிற 19 ம்தேதி திருப்பரங்குனறம், அவரக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் உள்பட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டமன்ற தொகுதிளில் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு அரவாக்குறிச்சியில் முடித்தார்.

அதன்பின் கொடைக்கானலுக்கு தனது மனைவியுடன் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க வந்த ஸ்டாலினை மாவட்ட எல்லையில் கழக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையிலான கட்சி பொறுப்பாளர்கள் சிலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து ஸ்டாலின் அவரது துணைவியாருடன் கொடைக்கானல் சென்றவர் அங்குள்ள கால்டன் ஸ்டார் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

கோடையில் இரண்டு நாள் ஓய்வு எடுத்து வரும் ஸ்டாலினை பார்க்க கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் கொடைக்கானலில் படகு சவாரி செய்தார். அப்போது அருகிலிருந்த சுற்றுலா பயணிகள் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் படகு சவாரி செய்யும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்தனர். அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.