Skip to main content

சுகர் டெஸ்ட் செய்ய உயிர் வேண்டுமே..? பரிதவிக்கும் முதியோர்கள்...!

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
r


 

      " பரிசோதனைக்குச் செல்லும்வரை எதையும் சாப்பிடாமல் ரத்தப்பரிசோதனை செய்தால் தான் ரத்தத்தில் சர்க்கரை நோயின் அளவுத் துல்லியமாகத் தெரியும். ஆனால், இங்கு ரத்தப்பரிசோதனை செய்வதோ மதியம் 12 மணிக்கு மேல்.! அதுவரை எங்களது உயிர் இருக்கனுமே..?" என வேதனையுடன் பரிதவிக்கின்றனர் ராமேஸ்வரத் தீவு மக்கள்.

 

  70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில், தினசரி பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் யாத்திரீகர்ளும் வந்து செல்லும் நிலையில், இதில் பெரும்பாலோனோர் சிகிச்சைக்காக நம்பியிருப்பது ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையை மட்டுமே.! ராமேஸ்வரம் மட்டுமல்லாது அருகிலுள்ள தங்கச்சிமடம், பாம்பனில் வசிக்கும் மக்கள் இங்கு தான் சிகிச்சைப் பெறமுடியும். உள்நோயாளிகள் மட்டுமின்றி தினமும் சுமார் 500 பேர் வரை சிகிச்சை பெறும் இம்மருத்துவமனையில், 16 மருத்துவர்கள் தேவை என்ற நிலையில் இங்கு 7 மருத்துவர்கள் மட்டும் பற்றாக்குறையுடன், கூடுதல் சுமையுடன் பணியாற்றி வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்காகவும் இங்கு இரண்டு ரத்தப்பரிசோதனை ஆய்வகங்கள் இருக்கும் நிலையில், டெக்னீசியன்களும் பற்றாக்குறை நிலையே.!! இருக்கின்ற டெக்னீசியன்களும் வெளியூர்களிலிருந்து வரவேண்டிய நிலை உள்ளதால் ரத்தப் பரிசோதனைக்காக நோயளிகள் இரண்டு தினங்கள் காத்திருக்கும் அவல நிலை இங்கு உள்ளதால் வயதான முதியோர்கள் பரிதவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

    " முந்தைய நாள் இரவு சாப்பாட்டிற்கு பிறகு, 8 லிருந்து 12 மணி நேரம் கழித்து மறுநாள் காலை பரிசோதனைக்குச் செல்லும்வரை எதையும் சாப்பிடக் கூடாது. அப்பொழுது தான் ரத்த அளவில் சர்க்கரையின் அளவு துல்லியமாகத் தெரியும். ஆனால், இங்கு காலையில் வரவேண்டிய டெக்னீசியன்கள் மதியம் 2 மணிக்கு மேல் தான் வருகின்றார்கள். கேள்வி கேட்டால் சரியான பதிலும் கிடையாது. அவர்கள் வந்து பரிசோதிக்கும் வரை உயிரைக் கையில் பிடித்திருக்கனும்." என்கின்றார் மீனவர் குடியிருப்பை சேர்ந்த அடைக்கலம் எனும் முதியவர்.

சார்ந்த செய்திகள்