தீபா யார், அவர் யார் என்றே தெரியாது என கிண்டல் செய்தார். உடனே பின்னால் இருந்த கட்சிகாரர்கள் சிரித்துக்கொண்டே ஜெ.வின் அண்ணன் மகள் என்று சொன்னவும் அப்படி யாரும் இருக்காங்களா? என்று அப்பாவியாக கேட்டுக்கொண்டே அப்டியா எனக்கு அது தெரியாதுங்க என்று சொல்லி எல்லோரையும் அசர வைத்தார் தம்பிதுரை.
கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு மக்களுக்காகதான் செயல்படுகிறது. ஜெ. முதல்வராக இருக்கும் போதே எய்ம்ஸ் இடங்கள் தேர்வு செய்து அனுப்பினோம். ஆனால் மத்திய அரசு தான் தாமதமாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவல் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் பொன்ராதாகிருஷ்ணன் அதை தடுக்க ஏதோனும் முயற்சி செய்துள்ளாரா? இவை அனைத்தும் அரசை குறை கூற வேண்டும் என்கிற நோக்கில் சொல்லும் பொய்யான குற்றசாட்டு ஆதாரம் இருந்தால் நிருபிக்கட்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் பிஜேபி. இதுவரை எத்தனை ஊழல் குற்றசாட்டுகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்துள்ளது. 2ஜி வழக்கில் இதுவரை மேல்முறையீடு செய்ய மெத்தனம் காட்டுகிறது. மத்திய அரசிடம் இருந்து 20 இலட்சம் கோடி ரூபாய் நிதி இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரே தேசம், ஒரே மொழி, ஓரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்ளை ஏற்புடையது அல்ல.
லோகாயுத்தா சட்டத்தை முறையாக அமுல்படுத்தாதை ஸ்டாலின் கூறியது குறித்து கேட்டபோது, எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்யும் கட்சியாக திமுக உள்ளது. அவர்களுக்கு என்ன தெரியும்.
பேட்டியின் போது... இரட்டைஇலையை மீட்பேன் என்று ஜெ.தீபா சொல்லியிருக்காரே என்ற கேள்வி கேட்டவுடன்… தீபா யார், அவர் யார் என்றே தெரியாது என கிண்டல் செய்தார். உடனே பின்னால் இருந்த கட்சிகாரர்கள் சிரித்துக்கொண்டே ஜெ.வின் அண்ணன் மகள் என்று சொன்னவும் அப்படி யாரும் இருக்காங்களா? என்று அப்பாவியாக கேட்டுக்கொண்டே அப்டியா எனக்கு அது தெரியாதுங்க என்று சொல்லி எல்லோரையும் அசர வைத்தார்.
பொதுப்பயன்பாட்டிற்கு சாலைகள் தேவை. கரூர் - கோவை 4 - வழி சாலை அமைக்க கடந்த 3 - ஆண்டுகளாக போராடி தற்போது செயல்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். சாலை வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்ச்சிகள் மேற்கொள்வேன். தேவையில்லை என்றால் அமைதியாக இருந்துவிடுவேன்.
முன்னதாக புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சங்க காலத்தில் ஜாதி, மதம் கிடையாது. சமஸ்கிருத கலாச்சாரம் வந்த போது, ஜாதி, மதம் உருவானது. சேர, சோழ, பாண்டியன் ஆட்சி காலத்தில் தமிழ் வளர்ந்தது. சைவம் தமிழை வளர்த்தது. பிரதமர் நரேந்திர மோடி, புதிய கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த போது, ராஜராஜ சோழன் பெயரை வைத்தார்.
இத்ததைய வரலாறுகளை புத்தகங்கள் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். கலாச்சாரம், இனப்பற்று வளர தாய் மொழிப் பற்று அவசியம். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கணக்கில்லாத புத்தகங்களை படித்தவர். அவரது படிப்பாற்றல்தான், தமிழகத்தில், 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி நீடிக்கிறது. நம்மை செதுக்கிக் கொள்ள புத்தகங்களை படிக்க வேண்டும்,'' என்றார்.