மத்திய மாநில அரசுகளின் துரோகத்தை கண்டித்து மா.இ.கூ. ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் மத்திய, மாநில அரசுகளின் நம்பிக்கை துரோகத்தை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO-TN) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி, திராவிடர் கழகத்தின் மாணவரணி, மதிமுக மாணவரணி, சுயமரியாதை மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் கழகம், மாணவர் இந்தியா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் RSF, NSVT, AISF, SFI, MSF, SIO, CFI, SMI, TSF, TSYF, DSF, BSM கலந்து கொண்டன.
நீட்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. போராட்டம்
நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை பாரிமுனையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் எஸ்.டி.பி.ஐ. சார்பில் இன்று நடைபெற்றது.
படங்கள்: அசோக்குமார்